தங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி - ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 குறைவு!

Silver Gold
By Vinoja Nov 11, 2026 06:38 AM GMT
Report

இன்று  (நவம்பர் 11) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரப்படி, தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. இது குறித்த முழுமையான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நவம்பர் மாத தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், நேற்றும் தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், இன்றும் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி - ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 குறைவு! | Gold And Silver Prices Drop Today S Latest Rates

நேற்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.13,210 ஆகவும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,05,680 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து ரூ.13,015 ஆக உள்ளது. இதனால், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,560 குறைந்து ரூ.1,04,120 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி - ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 குறைவு! | Gold And Silver Prices Drop Today S Latest Rates

இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.10,650 ஆகவும், சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.85,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை 

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.200 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி - ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 குறைவு! | Gold And Silver Prices Drop Today S Latest Rates

தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவடைந்து வருவதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ள மக்கள் மத்தியிலும் முதலீட்டாளர்கள் மத்தியிலும் இந்த விலை மாற்றம் கவனம் பெற்றுள்ளது.