5 நாட்களில் சவரனுக்கு ரூ.5,120 குறைவு - இன்றைய விலை நிலவரம்!

Silver Gold
By Vinoja Nov 16, 2026 06:46 AM GMT
Report

Today Gold Rate: இன்றைய (நவம்பர் 16) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.5,120 குறைந்துள்ளது. இது நகை வாங்கக் காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 நாட்களில் சவரனுக்கு ரூ.5,120 குறைவு - இன்றைய விலை நிலவரம்! | Gold And Silver Prices Drop Again Today Rate

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,615-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இன்றைய நிலவரம்

அதன்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.12,540-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,00,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.10,265-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.82,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

5 நாட்களில் சவரனுக்கு ரூ.5,120 குறைவு - இன்றைய விலை நிலவரம்! | Gold And Silver Prices Drop Again Today Rate

வெள்ளி விலை 

வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.190-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

5 நாட்களில் சவரனுக்கு ரூ.5,120 குறைவு - இன்றைய விலை நிலவரம்! | Gold And Silver Prices Drop Again Today Rate

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர் சரிவு நகை வாங்க விரும்புவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.