சவரன் ரூ.57,000 தாண்டி புதிய உச்சம் - எட்டாக் கனியாகும் தங்கம்!
ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (அக்.16) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ. 57,120க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,140க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனையாகிறது.

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

பலுசிஸ்தான் சுதந்திர நாடு...! பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம் - அதிரடி அறிவிப்பால் அதிரும் உலகம் IBC Tamil
