ஒருவழியாக சற்று குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் ஆறுதல்
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (நவ.01) விலை குறைந்துள்ளது.
குறைவு
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ. 59,080க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,385க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.106க்கும், ஒரு கிலோ ரூ.1,06,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.