ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை - எவ்வளவு பாருங்க
தங்கத்தின் விலை மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (மே 31) விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.
இன்றைய நிலவரம்
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.8,920க்கும், சவரன் ரூ.71,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை சற்று குறைந்து கிராம் ரூ. 110.80 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.