ஒரே நாளில் சரமாரியாக சரிந்த தங்கம் விலை - இப்போது நகை வாங்கலாம்!
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,000-க்கும் மேல் குறைந்துள்ளது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூன் 7) விலை குறைந்துள்ளது.
குறைவு
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து, ரூ.8,980-க்கும், சவரனுக்கு ரூ.1200 குறைந்து, ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.117க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,17,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.