5 நாட்களில் சவரனுக்கு ரூ.1,680 உயர்வு - எப்போதுதான் நகை வாங்கலாம்?
தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூன் 6) விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.
இன்றைய நிலவரம்
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.9,130-க்கும், சவரன் ரூ.73,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலையிலும் மாற்றமின்றி கிராம் ரூ.114-க்கும், கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.