உச்சம் தொட்ட தங்கம் விலை - ஆனாலும் கூட்டம் குறையாமல் விற்பனை!
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தங்கம் விலை உச்சத்தை தொட்டுள்ள போதிலும், அட்சய திருதியையொட்டி, கடந்த ஆண்டை காட்டிலும் 20 சதவீதம் அதிகமாக தங்க நகைகள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்சய திருதியை, நடப்பாண்டு இரண்டு நாட்கள் நீடித்தது. ஆபரணத் தங்கம், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 44,840 ரூபாய்க்கு விற்பனையானது. காலையில் முன்கூட்டியே நகைக்கடைகள் திறக்கப்பட்டு, வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது.
உயர்வு
புதிய வடிவமைப்பிலான ஆபரணங்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஆர்வத்துடன் மக்கள் வாங்கி சென்றனர். இந்நிலையில், இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து 5,615 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.44,920 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து 4,600 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ.36,800 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000 எனவும் விற்பனையாகிறது.