ரூ.1 லட்சத்தை தொட்ட தங்கம் விலை - பயங்கர ட்விஸ்ட்டால் மக்கள் அதிர்ச்சி

Tamil nadu Today Gold Price Daily Gold Rates
By Sumathi Apr 22, 2025 04:38 AM GMT
Report

வரலாற்றில் முதல்முறையாக தங்கத்தின் 10 கிராமிற்கு ரூ.1 லட்சத்தை அடைந்து உள்ளது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

gold price today

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 22) விலை அதிகரித்துள்ளது.

உயர்வு

அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.74,320க்கும், கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,290க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை அடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் டன் கணக்கில் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். குறைந்து வரும் டாலர் மதிப்பு, வர்த்தக பாதிப்பு, பொருளாதார சரிவுகளில் இருந்து மீண்டு வரும் நோக்கில் தங்கத்தை வாங்கி வருவதே விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.