ஏறிய தங்கம் விலை; இன்றைய நிலவரம் - குழப்பத்தில் இல்லத்தரசிகள்!
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளது.
உயர்வு
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.42,440-க்கும், கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.5,305-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், கிராம் வெள்ளி ரூ.1.50 காசுகள் உயர்ந்து ரூ.74.50-க்கும், கிலோ வெள்ளி ரூ.1500 உயர்ந்து ரூ.74500-க்கும் விற்பனையாகிறது.
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan