தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி சரிவு – இன்று சவரன் எவ்வளவு?

Silver Gold
By Vinoja Jun 16, 2026 06:35 AM GMT
Report

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் நகை வாங்குவோர், முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன. இந்நிலையில், இன்றைய (ஜூன் 16) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

ஜூன் மாதத்தின் முதல் நாளிலேயே தங்கத்தின் விலை கணிசமாக குறைந்ததால் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி சரிவு – இன்று சவரன் எவ்வளவு? | Gold And Silver Price In Chennai June 16Th 2026

இருப்பினும், அதனைத் தொடர்ந்து சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.

அந்த வகையில், நேற்று (ஜூன் 15) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,070 ஆகவும், சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,12,560 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி சரிவு – இன்று சவரன் எவ்வளவு? | Gold And Silver Price In Chennai June 16Th 2026

இன்றைய சந்தை நிலவரம்

இந்நிலையில், இன்று (ஜூன் 16) தங்கத்தின் விலையில் மீண்டும் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.14,060 ஆகவும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,480 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.11,790 ஆகவும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.94,320 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி சரிவு – இன்று சவரன் எவ்வளவு? | Gold And Silver Price In Chennai June 16Th 2026

இதற்கிடையில், வெள்ளி விலையிலும் சரிவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.275 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.