தங்கம் விலை இன்றைய நிலவரம் - இன்னும் குறையுமா? முக்கிய தகவல்!

Today Gold Price Daily Gold Rates
By Sumathi Nov 18, 2023 05:15 AM GMT
Report

தங்கம் மாற்றமில்லாமல் இன்றும் அதே விலையே நீடிக்கிறது.

 இன்றைய நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

today-november-18th-gold-and-silver-price

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில் இன்று விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

தங்கம் விலை குறையுமா?

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,700 ஆகவும், சவரன் ரூ.45,600 ஆக விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து, ரூ.79.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000-க்கும் விற்கப்படுகிறது.

anand-srinivasan about gold price

மேலும் இதுகுறித்து ஆனந்த் சீனிவாசன் பேசுகையில், அடுத்த 18 மாதங்களுக்குத் தங்கம் விலை இதே ரேஞ்சில் தான் இருக்கும். தங்கத்தை 5200 ரூபாய் முதல் ரூ. 5600 வரை தங்கத்தை வாங்குவது சரியாக இருக்கும். இடையில் எதாவது சர்வதேச பதற்றமான நிகழ்வுகள் நடந்தால் தங்கம் விலை சற்று அதிகரிக்கும் என்பதால் அதையும் கவனத்தில் கொள்ளவும் எனத் தெரிவித்துள்ளார்.