தப்புதானே .. விமான நிலையத்தில் பிராங்க் செய்த வீராங்கனை: வைரலாகும் வீடியோ

airport Gold Olympic Canada Prank
By Irumporai Aug 29, 2021 09:57 PM GMT
Report

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று நிறைவு பெற்றது. கொரோனா பரவல் இருந்தாலும் போட்டிகள் நடைபெற்றன.

இதில்கனடாவைச் சேர்ந்த சைக்கிள் வீராங்கனை கெல்ஸி மிட்செல் பங்கேற்றார். அவர் சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றார். இந்த நிலையில், கெல்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பிறகு, கனடா திரும்பிய கெல்ஸி மிட்செல் ஜப்பானில் உள்ள விமான நிலையத்திற்கு வருகிறார். அப்போது, விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் அந்த மெட்டல் டிடெக்டர் வழியாக வருகிறார்.

அவர் அந்த இயந்திரம் வழியாக கடந்து வரும்போது மட்டும் அலார்ம் அடிக்கிறது. இதனால், விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் பதற்றம் அடையவே பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதிக்க வந்தார்.

அப்போது, மிட்செல் சட்டென்று தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வெளியில் எடுத்து காட்ட . உடனே அந்த பாதுகாப்பு அதிகாரி உள்பட விமான நிலையத்தில் இருந்த அனைவரும் கெல்ஸி மிட்செலை கைதட்டி பாராட்டுவார்கள். இதை, அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுக்க தற்போது,இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.