அய்யோ... என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது சாமி... - நீதிமன்ற வளாகத்தில் கோகுல்ராஜின் தாயார் கதறல்
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், கல்லூரியில் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியை காதலித்து வந்தார்.
இதனை ஏற்கமுடியாத சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் அவரை ஆவணக் கொலை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.
தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனை தொடர்ந்து யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் ஆணவக்கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கும் ஆயுள் தண்டனையும், முதல் இரு குற்றவாளிகளுக்கு மூன்று ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில், கோகுல்ராஜின் தாயார் சித்ரா கதறி அழுதார்.. அய்யோ எனக்கு வந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது. விடுதலை செய்யப்பட்ட 5 பேருக்கும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று கதறினார். இவர் கதறிய காட்சி அங்கிருந்தவர்களின் நெஞ்சை கணக்கச்செய்தது.