கோகுல்ராஜ் கொலை வழக்கு - பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதிஉயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார்
கோகுல்ராஜ் கொலை வழக்கு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி இன்று ஆஜராக மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது
அதன்படி கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்படுத்தியது காவல்துறை.

போதிய பாதுகாப்பை சுவாதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை காவல்துறை ஆஜர்படுத்தினர்.
சுவாதி ஆஜார்
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்தியன் வங்கியில் வேலை- டிகிரி முடித்தவர்களுக்கு அரசு நிரந்தர வேலை வாய்ப்பு- முயற்சித்து பாருங்க Manithan