கோகுல்ராஜ் கொலை வழக்கு - சுவாதியை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

Tamil nadu Madurai
By Thahir 1 வாரம் முன்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை நாளை ஆஜர்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

சுவாதியை நாளை ஆஜர்படுத்த உத்தரவு 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை நாளை ஆஜர்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நீதித்துறை மனசாட்சியை திருப்திப்படுத்த தானாக முன்வந்து சுவாதியை விசாரிக்க விரும்புகிறது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Gokulraj murder case - Court orders to produce Swathi

உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கூறுகையில், மேல்முறையீட்டு நீதிமன்றம் துறவிகளை போல தவறுக்கு எதிராக சமநிலையை பேண முடியாது. இது கட்டாயம் தேவையானது, தவறினால் நீதித்துறையின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும்.

 உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கோகுல்ராஜ் கொலைக்கு முன்பாக சுவாதியுடன் நட்பில் இருந்ததுதான் வழக்கின் முக்கியமாக கருதப்படுகிறது என தெரிவித்துள்ளார். இதனால் சுவாதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பை நாமக்கல் காவல்துறை வழங்க வேண்டும்.

சுவாதியை யாரும் சந்திக்கவோ, செல்போனில் பேசுவதோ கூடாது என்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். சுவாதி எவ்வித பயமும், அச்சுறுத்தலும் இன்றி நீதிமன்றம் வருவதை உறுதி செய்ய வேண்டும் என கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

எனவே, சுவாதியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.