கோகுல்ராஜ் கொலை வழக்கு - நீதிமன்றத்தில் கதறி அழுத ஸ்வாதி

By Thahir Nov 25, 2022 06:48 AM GMT
Report

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை இன்று ஆஜர்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஆணையிட்டிருந்தது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு - நீதிமன்றத்தில் கதறி அழுத ஸ்வாதி | Gokulraj Murder Case Crying Swathi

அதன்படி, கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல்துறை இன்று ஆஜர்படுத்தியது.

இந்த நிலையில், வழக்கு விசாரணையின்போது, பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி வாக்குமூலம் அளித்து வருகிறார். அதாவது, வீடியோவில் உள்ள பெண் அருகில் இருக்கும் பையன் யார் என கேட்டதற்கு கோகுல்ராஜ் போல தெரிவதாக சுவாதி பதிலளித்துள்ளார்.

இதுபோன்று சிசிடிவி காட்சியில் இருக்கும் பெண் யார் என 3 முறை நீதிபதிகள் கேட்டதற்கு, யாரென தெரியவில்லை என சுவாதி கூறியுள்ளார்.

உண்மையை மனசாட்சிக்கு உட்பட்டு சொல்லுங்கள் என நீதிபதிகள் கேட்டதற்கு சுவாதி கண்கலங்கியுள்ளார். சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜியுடன் செல்வது நான் இல்லை.

கோகுல்ராஜ் பின்னணி குறித்து எனக்கு தெரியாது என தெரிவித்த சுவாதி, சிசிடிவி பதிவில் க்ளோசப் காட்சியை பார்த்தவுடன் கண்ணீர் விட்டு கதறினார் சுவாதி என கூறப்படுகிறது.

வாக்குமூலம் பொய் என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் நீதிபதிகள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். ஆனாலும், கண்கலங்கியவாறே சுவாதி தனது வாக்குமூலத்தை பதிவு செய்து வருகிறார்.