காந்தியை போன்று கோட்சேவும் இந்தியாவின் மகன் தான் - மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
கோட்சேவும் இந்தியாவின் மகன் தான் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
கோட்சேவும் இந்தியாவின் மகன் தான்
மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கோட்சே பற்றி பேசிய கருத்துக்கள் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

அவர் பேசுகையில், காந்தியை கொன்றவர் என்றாலும் கோட்சேவும் இந்தியாவின் மகன் தான் எனவும், அக்பர், அவுரங்க ஷீப் போல இந்தியாவில் ஆக்கிரமிக்க வந்தவர் அல்ல எனவும் குறிப்பிட்டார்.
மேலும், சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் மத மாற்றம் அதிகஅளவில் நடைபெற்று வருவதாகவும், அங்கு மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் மதமாற்றத்திற்கு சட்டங்கள் வகுக்கப்படும் என்றும் அதனை மீறுபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் சனாதானத்தை மீறாத வகையில் இருக்கும் வரையில் தான் இந்தியா ஒரு நாடாக இருக்கும் எனவும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.