யாரு சாமி நீங்க : கொரோனாவை அனுப்பியது கடவுளின் சூப்பர் கம்ப்யூட்டரா? அஸ்ஸாம் அமைச்சர் அதிரடி

corona supercomputer assamminister Chandra Mohan Patowary
By Irumporai Aug 27, 2021 01:55 PM GMT
Report

கடவுளின் சூப்பர் கம்யூட்டர் தான் கொரோனா வைரஸை உலகிற்கு அனுப்பியுள்ளது என அசாம் அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில், அசாம் அமைச்சர் சந்திர மோகன் படோவரி, கொரோனாவால் கணவனை இழந்த விதவைகள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸை கடவுளின் சூப்பர் கம்ப்யூட்டர் அனுப்பியுள்ளது. இந்த தொற்றுநோய் மனிதனால் உருவாக்கப்படவில்லை.எனவே கொரோனா தோற்றால் யார் பாதிக்கப்படுவார்கள்?, யார் பாதிக்கப்பட மாட்டார்கள்?, யார் பூமியில் இருந்து எடுத்து செல்லப்படுவார்கள்? என்பதை இயற்கை முடிவு செய்வதாக கூறியுள்ளார்.

மேலும் ( WHO ) உலக சுகாதார அமைப்பினாலே கொரோனா தொற்று நோயை தடுக்கும் மருந்தினை கண்டுபிடிக்க தவறிவிட்டதாகவும் டிப்டாப் விரிவுரைகளை வழங்கும் விஞ்ஞானிகளும் கொரோனா நிவாரணம் அளிக்கும் மருந்தை கண்டுபிடிப்பதில் தோல்வி அடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.

கொரோனாவிற்கு இது வரை நிரந்தர தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை ஆனால் அமைச்சர் கூறுவது போல்கொரோனா வைரஸை கடவுளின் சூப்பர் கம்ப்யூட்டர் அனுப்பவில்லை எனவே அமைச்சரின் இந்த பேச்சு அசாம் அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.