‘‘பிரதமர் மோடி என்ன கடவுளா’’ : மம்தா பானர்ஜி கேள்வி

election modi god banerjee
By Jon Apr 05, 2021 01:03 PM GMT
Report

பிரதமர் மோடி என்ன கடவுளா ? அபார சக்தி பெற்ற மனிதரா? இன்னும் 6 கட்டத் தேர்தல் இருப்பதால், வெற்றியைப் பற்றிப் பேச முடியாது என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் 294 தொகுதிகளிலும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் 2 கட்டங்களாக 60 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

3-வது கட்டத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கானாகுல் நகரில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய மம்தா பானர்ஜி பிரதமர் மோடி என்ன கடவுளா? அல்லது வருவதை முன்கூட்டியே கூறும் சக்தி படைத்தவர் என்று நினைக்கிறாரா? இன்னும் 6 கட்டத் தேர்தல் இருக்கும் நிலையில் வெற்றியைப் பற்றி யாரும் இப்போதே சொல்ல முடியாது என கூறினார்.

மேலும், மாநிலத்தில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்கவும், தடுக்கவும் பாஜகவிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு புதிய கட்சி தொடங்கியுள்ளார். மாநிலத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய பேச்சுகளை புதிய கட்சியின் தலைவர் பேசி வருகிறார். ஆனால், அவர் மீது நடவடிக்கை ஏதுமில்லை என இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சித் தலைவர் அப்பாஸ் சித்திக்கை பெயர் குறிப்பிடாமல் மம்தா கூறினார்.