உலகை அழிக்கும் முடிவை கடவுள் ஒத்திவச்சுட்டாரு - பல்டி அடித்த தீர்க்கதரிசி
தன்னைத்தானே தீர்க்கதரிசி என சொல்லிக் கொள்ளும் கானா நாட்டை சேர்ந்த எபோ நோவா என்பவர் கூறியிருக்கிறார்.
உலகம் அழியும்
அழிவுக்குப் பின் பூமியில் மீண்டும் மக்களை குடியமர்த்த பைபிளில் வருவது போல 8 நோவா பேழைகளை கட்ட கடவுள் தன்னை பணியமர்த்தியிருப்பதாகவும்

அவர் கூறியதால் அவரை பின்தொடர்பவர்கள் தங்களை சொத்துக்களை விற்று அவருக்கு பணங்களை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், என்னுடைய வேண்டுதலை கடவுள் ஏற்று கொண்டிருக்கிறார். அதனால் உலகை அழிக்கும் முடிவை கடவுள் ஒத்திவைத்திருக்கிறார்.
தீர்க்கதரிசி பல்டி
அதனால், தொடர்ந்து இன்னும் பல பேழைகளை கட்ட போகிறேன். அதற்கு எனக்கு கடவுள் போதிய நேரம் கொடுத்திருக்கிறார். நோவாவை தேடி வந்த மக்களிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். மகிழ்ச்சியாய் இருங்கள் என கூறினார்.
அவர் கடந்த 3 ஆண்டுகளாக பேழையை கட்டி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், நாங்கள் கடவுளின் இரக்கத்திற்காக வேண்டி கொள்கிறோம். ஆனால், கடவுள் அமைதியாக இருந்து வருகிறார்.
நிறுத்து... என அவருடைய குரல் கேட்கும் வரை பேழையை கட்டி வருகிறேன். இறைவழிபாட்டுடன் எனக்கு ஆதரவு அளியுங்கள் என்றும் கூறினார். அவரை தேடி சீடர்கள் குவிந்து வருகின்றனர்.