கடவுள் இருக்காரு.. கண்டிப்பா ரஷ்யாவை தண்டிப்பார் - உக்ரைன் அதிபர் விரக்தி பேச்சு
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களை கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் என அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி விரக்தியில் பேசியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 8வது நாளாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்ய இராணுவ கைப்பற்றி வரும் நிலையில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் அங்கிருந்து தப்பித்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ரஷ்ய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று வெளியிட்ட வீடியோவில், "எங்கள் நாட்டின் மீது படையெடுத்ததற்கான விலையை ரஷ்யா நிச்சயம் கொடுக்கும். இழப்பீடு என்றொரு வார்த்தையுள்ளது. அதை இப்போதே உச்சரித்துப் பழகுங்கள். எங்களுக்கு நீங்கள் செய்த கொடுமைகள் அனைத்திற்கும் நீங்களே இழப்பீடு தருவீர்கள்” என்று சாபம் விடுத்துள்ளார்.
மேலும் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களை கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் எனவும் கடவுள் தண்டிக்கும் போது ரஷ்யாவால் எங்கும் ஒளிந்து கொள்ள முடியாது எனவும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து உக்ரைனில் ரஷ்யர்கள், ரஷ்ய அரசின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால் போரை சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே உலக மக்களின் விருப்பமாக உள்ளது.