ஆண் குழந்தை கொடுத்து கடவுள் ஆசீர்வதித்துள்ளார்: பாடகி ஸ்ரேயா கோஷல்

sherayaghoshal babyboy
By Irumporai May 22, 2021 01:47 PM GMT
Report

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடி வருகிறார்.

இவரின் இனிமையானக் குரலுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஷைலாதித்யா முகோபாத்யாயாவை திருமணம் செய்துகொண்ட நிலையில்,கடந்த மார்ச் 4 ஆம் தேதி, தான் தாய்மை அடைந்திருப்பதாக சமூக வலைதளத்தில்தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஷ்ரேயா கோஷலுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், கடவுள் அருளால் இன்று மதியம் விலைமதிப்பற்ற ஆண் குழந்தைப் பிறந்துள்ளது.

இதற்கு முன் அனுபவத்திராத மகிழ்ச்சியான உணர்வை இப்போது பெறுகிறேன். உங்களின் ஆசிர்வாதத்துக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.