மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி - அசாமில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

cute baby goat
By Petchi Avudaiappan Dec 28, 2021 06:05 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

அசாமில்  ஆடு ஒன்றுக்கு மனித உருவில் குட்டி பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அசாம் மாநிலம் சாச்சர் மாவட்டம், கங்கர் பகுதியில் ஒரு ஆடு மனித உருவில் குட்டியை ஈன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதுதொடர்பாக ஆட்டின் உரிமையாளர் அளித்த பேட்டி ஒன்றில், ஆடு சினையாக இருந்த போது வழக்கமாக ஆடுகள் குட்டி போடுவது போல தான் குட்டி போடும் என கருதினோம். ஆனால் கடந்த திங்கட்கிழமை ஆடு குட்டி போடும் போது அது முழுதாக வளராத மனித குழந்தை போல இருந்ததாக தெரிவித்துள்ளார். 

மேலும் வழக்கமாக ஆட்டிற்கு இருக்கும் வால், இல்லை உடல் முழுவதும் மனித குழந்தையின் உடல் போல இருந்தது. ஆனால் அதன் காது மற்றும் கால்கள் மட்டும் வித்தியாசமாக இருந்ததாகவும், ஆட்டுக்குட்டி  பிறந்து சில நிமிடங்களில் மரணித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.