55 பயணிகளை விட்டு சென்ற Go First விமானம் - ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு..!

India Flight
By Nandhini Jan 28, 2023 01:03 PM GMT
Report

55 பயணிகளை விட்டுச் சென்ற விவகாரத்தில் Go First நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு

கடந்த ஜனவரி 9ம் தேதி பெங்களூரிலிருந்து டெல்லி சென்ற விமானம் 55 பயணிகளை ஏற்றாமல், விமான நிலையத்திலேயே விட்டுச் சென்றது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இது தொடர்பான விமான போக்குவரத்து இயக்குநர அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், விமானத்தில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக அதிகாரிகளிடம் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததே இந்த தவறுக்கு காரணம் என்று தெரியவந்தது.

இதனையடுத்து, பயணிகளை விட்டுச் சென்ற காரணத்திற்காக ரூ.10 லட்சம் அபராதம் செலுத்தும்படி Go First நிறுவனத்துக்கு விமான இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.   

go-first-flight-55-passengers-fined-10-lakhs