திவாலான பிரபல இந்திய விமான நிறுவனம் - சேவைகள் நிறுத்தம்!
கோ பர்ஸ்ட் நிறுவனம் தாமாகவே திவால் விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது.
கோ பர்ஸ்ட்
மகாராஷ்டிரா, மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது கோ பர்ஸ்ட் விமான நிறுவனம். இது வாடியா குழுமத்துக்கு சொந்தமானது. இந்நிறுவனம் கடும் நிதி பற்றாக்குறை காரணமாக திவால் தீர்மான நடவடிக்கைக்கான நோட்டீஸை

தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனால், மே.3,4, மற்றும் 5 ஆகிய மூன்று நாட்களுக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுவதாகவும் அறிவித்துள்ளது.
சேவை நிறுத்தம்
தற்போதைய நிலையில் விமானத்துக்கு தேவையான இன்ஜின்கள் உள்ளிட்டவைகளை அமெரிக்காவின் பிராட் அன்ட் விட்னி நிறுவனம் சப்ளையை நிறுத்தி வைத்ததால், 28 விமானங்கள் இயக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து கடும் நிதி நெருக்கடியையும் சந்திக்க தொடங்கியது.
திவால் தீர்வு நடவடிக்கை குறித்த தகவலை இந்திய அரசுக்கும் தெரிவித்துள்ளது. அதனையடுத்து, பிராட் & விட்னி நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் கோ பர்ஸ்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.