உலக கோடீஸ்வரர் பட்டியல்: ஒரே நாளில் அதானிக்கு பின்னடைவு - ஏன்?

India Gautam Adani
By Sumathi Jan 25, 2023 10:57 AM GMT
Report

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

கௌதம் அதானி

புளும்பெர்க் நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அதானிக்கு, ஒரே நாளில் 7ஆயிரத்து 112கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதால், சொத்து மதிப்பு 9லட்சத்து 79ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

உலக கோடீஸ்வரர் பட்டியல்: ஒரே நாளில் அதானிக்கு பின்னடைவு - ஏன்? | Global Billionaires Rank Gautam Adani Slips To 4Th

இதனால், ஒரு சிறிய வித்தியாசத்தில், அதானியை முந்திய அமேசான் நிறுவனர் Jeff Bezos 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். கொரோன காலத்தில் நிறைய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு குறைந்து, அதனால், அதானியின் சொத்து மதிப்பு 13மடங்கு உயர்ந்தது.

பின்னடைவு

கடந்த செப்டம்பர் மாதம் 12.6லட்சம் கோடி ரூபாய் சொத்துடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய அதானியின் சொத்து மதிப்பு, கடந்த 4 மாதங்களில் மட்டும் சுமார் 3லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 15.3லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்திலும், 12.6லட்சம் கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள எலான் மஸ்க் 2வது இடத்திலும் உள்ளனர். 9 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள Bill Gates 5வது இடத்தில் தொடர்வதாக தெரிவித்துள்ளது.