இது இருந்தால் விராட் கோலி நிச்சயம் திணறுவார்- க்ளென் டர்னர் கணிப்பு

Virat Kohli World test championship Glenn turner
By Petchi Avudaiappan Jun 09, 2021 06:15 PM GMT
Report

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியி்ல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா நியூசிலாந்து பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வார்கள் எனநியூசிலாந்து முன்னாள் கேப்டன் க்ளென் டர்னர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் வருகிற 18 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இப்போட்டியில் இந்தியாவை விட நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் சவுத்தாம்ப்டன் சீதோஷ்ண நிலை ஸ்விங், சீம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், விராட் கோலி திணற வேண்டிய நிலை ஏற்படும் என நியூசிலாந்து முன்னாள் கேப்டன் க்ளென் டர்னர் தெரிவித்துள்ளார்.