தமிழ் பாரம்பரிய முறைப்படி நலங்கு வைத்துகொண்ட க்ளென் மேக்ஸ்வெல் - வைரலாகும் புகைப்படங்கள்
க்ளென் மேக்ஸ்வெல்-வினி ராமன் நலங்கு வைப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரௌண்டரான க்ளென் மேக்ஸ்வெல் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வினி ராமனை கடந்த 18-ந் தேதி திருமணம் செய்துகொண்டார்.
க்ளென் மேக்ஸ்வெல், வினி ராமனை ஒரு வாரம் கொண்ட திருமண நிகழ்வுகளை உள்ளடக்கிய பாரம்பரிய ஐயங்கார் சடங்குகளின் மூலம் திருமணம் செய்து கொண்டார்.
இரண்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய முறைப்படி நடந்து முடிந்த நிலையில் கொரோனா காரணமாக திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இவர்களது திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. நலங்கு வைப்பன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை வினி தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
க்ளென் ஆரஞ்சு நிற குர்தா மற்றும் முழு நீல பேன்ட் அணிந்தப்படி, பாரம்பரிய பட்டுபுடவை உடுத்தியிருக்கும் மனைவி வினியின் நெற்றியில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இவர்களது கல்யாண பத்திரிகை மஞ்சள் நிறத்தில் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்டு வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.