என்ன ஒரு அடி..அடி ஒன்னு இடி மாதிரி..மேக்ஸ்வெல் அடித்த ஒரே சிக்சரில் மைதானத்தை தாண்டி விழுந்த பந்து
ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணிக்கு விராட் கோலி 25 ரன்களும், தேவ்தட் படிக்கல் 40 ரன்களும் எடுத்து கொடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.
இதன்பின் களத்திற்கு வந்த டேனியஸ் கிரிஸ்டியன் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள பெங்களூர் அணி 164 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் மொய்ஸஸ் ஹென்ரிக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் அடித்த சிக்ஸர் மைதானத்திற்கு வெளியே சென்று ரோட்டில் பந்து விழுந்தது.
தற்போது இந்த காட்சிகள் அவரது ரசிகர்கள் மற்றும் பெங்களூர் அணியின் ரசிகர்கள் சமூக வளைதளங்களில் தீவிரமாக பகிர்ந்து வருகின்றனர்.