பீட்சாவில் கண்ணாடித் துண்டுகள் : மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டோமினோஸ்

Viral Photos Pizza
By Irumporai Oct 09, 2022 02:10 AM GMT
Report

பிரபல நிறுவனத்தின் பீட்சாவில் கண்ணாடித் துண்டுகள் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீட்சாவில் கண்ணாடி துண்டுகள்

பீட்சாவில் கண்ணாடித் துண்டுகள் இருக்கும் அதிர்ச்சியூட்டும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பீட்சாவில் கண்ணாடித் துண்டுகள் : மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டோமினோஸ் | Glass Shards Dominos Pizza

ட்விட்டர்வாசி ஒருவர்  டோமினோஸில் இருந்து தான் பெற்றதாகக் கூறிய உணவின் படங்களை வெளியிட்ட அருண் கொல்லூரி என்பவர், தனது பீட்சாவில் கண்ணாடித் துண்டுகள் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

சிக்கலில் டோமினோஸ்

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், டோமினோஸ் பீட்சாவில் 2 முதல் 3 கண்ணாடித் துண்டுகள் இருப்பதை கண்டறிந்துள்ளேன். உலகளவில் புகழ்பெற்ற பிராண்ட் எந்த மாதிரியான உணவை வழங்குகிறது என்பதையே இது உணர்த்துகிறது.இனி, டோமினோஸில் ஆர்டர் செய்வேனா என்பது தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.

உணவு விநியோக செயலி மூலம் இந்த பீட்சாவை அவர் ஆர்டர் செய்திருக்கிறார்.பீட்சா கடையிலிருந்து ஆர்டர் எடுத்து வந்த பிறகு பீட்சா பெட்டியில் கண்ணாடி துண்டுகள் விழுந்திருக்கலாமே என கேள்வி எழுப்பியதற்கு, பீட்சா பெட்டி சீல் வைக்கப்பட்டிருந்ததாக பதில் அளித்துள்ளார்.

டோமினோஸ் பதில் வரவில்லை

அவரது புகாருக்கு பதிலளித்த மும்பை காவல்துறை, முதலில் வாடிக்கையாளர் சேவையிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்கும்படி அவரை கேட்டு கொண்டது. தயவுசெய்து முதலில் வாடிக்கையாளர் சேவையிடம் புகார் அளியுங்கள்.

அவர்கள் பதிலளிக்கவில்லை அல்லது திருப்தியற்ற பதில் அளிக்கவில்லை என்றால், சட்டப்பூர்வ தீர்வைப் பற்றி நீங்கள் யோசிக்கலாம் என மும்பை காவல்துறை ட்வீட் செய்துள்ளது. பயனரின் புகாருக்கு டோமினோஸ் பீட்சா இதுவரை பதிலளிக்கவில்லை.

கடந்த மாதம், பீட்சா செய்யும் இடத்தின் மேல் துடைப்பம் தொடங்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் டோமினோஸ் கடையில் எடுக்கப்பட்டதாக பயனர்கள் கூறி இருந்தனர்.