ரூ.12,000 நிவாரணம் வழங்குக - தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்..!!

M K Stalin Tamil nadu Edappadi K. Palaniswami
By Karthick Dec 10, 2023 12:16 PM GMT
Report

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதியை ரூ.12,000 -மாக உயர்த்தி வழங்கவேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இபிஎஸ் அறிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு முன்திட்டமிடாமல், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஆட்சிப் பொறுப்பேற்ற 31 மாதங்களில், முறையாக மழை நீர் வடிகால் பணிகளை செய்யாததன் காரணமாக, மிக்ஜாம் புயல் மழையால், சென்னை மாநகரம், புறநகர் பகுதி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள், வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

give-rs12000-as-relief-eps-urges-tn-government

பொதுமக்கள் கடந்த ஒருவார காலமாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உடைமைகளை இழந்து, வாகனங்களை இழந்து, தொழிலை இழந்து, இந்த அவல ஆட்சியாளர்கள் மீது தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வந்த நிலையில், நிவாரணத் தொகை என்று ஒரு சொற்ப தொகையை அறிவித்திருப்பது, பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

12,000 வழங்குக

எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000/- ரூபாயை உயர்த்தி 12,000/- ரூபாயாக வழங்குவதுடன், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக, மேற்கண்ட நிவாரணங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக வழங்கிட இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று நிவாரண தொகையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த நியாய விழா கடைகளில் ரூ.6000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.