ப்ளீஸ் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க - மும்பை அணிக்கு அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர்
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான அசாரூதீன் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 15வது சீசன் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் யாரும் எதிர்பாராத விதமாக 5 முறை சாம்பியன் அணியான மும்பை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. பழைய அணிகள் தொடங்கி புதிதாக வந்த 2 அணிகளும் அவர்களை ஒருகை பார்த்து விட்டதால் என்ன செய்வதென்றே தெரியாமல் அணி நிர்வாகம் விழி பிதுங்கியுள்ளது.
அந்த அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளிலும் தோற்ற நிலையில் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேற உள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்துக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் வேறு அணிக்கு சென்று விட்டது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இனி வரும் போட்டிகளில்அர்ஜூன் டெண்டுல்கர் போன்ற புதிய வீரர்களுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுத்து பார்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான அசாரூதீன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன டிம் டேவிட் போன்ற திறமையான பல வீரர்கள் இருக்கும் போது அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதும் தவறு எனவும் அவர் கூறியுள்ளார்.