ஏழை பெண்களை மதுபோதைக்கு அடிமையாக்கி விஐபிகளிடம் அனுப்பும் கொடூரர் - அதிர்ச்சி சம்பவம்
பொள்ளாச்சி போன்றே சிவகங்கையில் ஏழைப்பெண்களை குறிவைத்து பாலியல் இச்சைக்கு பயன்படுத்தும் கொடுமை அரங்கேறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த ராஜா, திருமண நிகழ்வு, திருமண வரவேற்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை அழைத்து சென்று ஊதியம் வாங்கி கொடுத்து வந்துள்ளார்.
இப்படி வரும் ஏழை பெண்களை மதுபோதைக்கு அடிமையாக்கி அவர்களோடு உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அதை வீடியோவாக எடுத்து வைத்தும், அதை வைத்து மிரட்டியும் விஐபிகளிடம் பாலியல் தொழிலுக்காக அனுப்பி வைத்திருக்கிறார்.
வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்த அவர்களோ ராஜா சொல்வதை கேட்டே நடந்து வந்துள்ளனர். இதில் தைரியம் நிறைந்த சில பெண்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ராஜாவை, அந்த பெண்கள் ஒன்றிணைந்து வெறித்தனமாக அடித்து தங்களின் ஆத்திரங்களை கொட்டி தீர்த்துள்ளனர்.