3400 முத்தங்களுடன் வலம் வந்த கார்

Madhya Pradesh
By Fathima Aug 25, 2026 08:06 AM GMT
Report

Girlfriends Plants 3400 Kisses on Boyfriend Car: இந்தியாவில் காதலனின் காருக்கு காதலி கொடுத்த உதட்டு முத்தத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் முத்தங்கள் பதித்த கார் ஒன்று வலம் வருவதாக சமூகஊடகங்களில் வீடியோ வைரலானது.

குறித்த காரில் சுமார் 3400 முத்தங்கள் இருந்துள்ளன, இதுகுறித்து விசாரணை நடத்த காரின் உரிமையாளரான ஆதித்யா சிகர்வாரை போலிசார் அழைத்து சென்றனர்.

3400 முத்தங்களுடன் வலம் வந்த கார் | Girlfriends Plants 3400 Kisses On Boyfriend Car

தன்னுடைய காதலி சுமார் 3.5 மணிநேரம் செலவழித்து காரில் 3400 முத்தங்களை இட்டதாகவும், அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் சட்டப்படி குற்றம் என்பது தனக்கு தெரியாது எனவும் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து அவருக்கு 5500 ரூபாய் அபராதம் விதித்த போலிசார், முத்தங்களை அழிக்க உத்தரவிட்டனர்.  

3400 முத்தங்களுடன் வலம் வந்த கார் | Girlfriends Plants 3400 Kisses On Boyfriend Car