நிச்சயம் முடிந்த நிலையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - காதலன் செய்த செயல்!
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், காதலியை காதலன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேட்காத காதலி
நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சௌந்தர்யா. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதற்காக, மேவளூர்குப்பம் பகுதியில் தனியாக வீடு எடுத்து, தனது தோழிகளுடன் தங்கி வந்தார்.
அந்த வீட்டிற்கு அருகே, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞரும் வீடு எடுத்து தங்கி, அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.
தொடர்ந்து, இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவிக்கவே, திருமண தேதி உறுதி செய்யப்பட்டது. ஆனால், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, சௌந்தர்யா வேறொரு ஆண் நண்பருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
காதலன் வெறிச்செயல்
இதனை தினேஷ் பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும், சௌந்தர்யா ஆண் நண்பருடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், சௌந்தர்யா வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து அங்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து,
தினேஷ் சௌந்தர்யாவின் முகம், கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாகக் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில், ரத்த வெள்ளத்தில் சௌந்தர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனே, தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்த போலீஸார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், தினேஷ், காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.