உன் எக்ஸ் லவ்வருக்கு சாப்பாடு ஆர்டர் பண்றத நிறுத்துமா - கெஞ்சிய சொமேட்டோ!

Gujarat
By Sumathi Aug 05, 2023 07:54 AM GMT
Report

முன்னாள் காதலனை பழிவாங்க இளம்பெண் செய்த செயல் கவனம் ஈர்த்துள்ளது.

முன்னாள் காதலன்

போபாலைச் சேர்ந்தவர் அங்கிதா. சோமேட்டோ டெலிவரி செயலி மூலம் தனது முன்னாள் காதலருக்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். அதுவும் கேஷ் ஆன் டெலிவரியில் செய்துள்ளார். மேலும், பலமுறை இதுபோன்று உணவு ஆர்டர் செய்துள்ளார்.

உன் எக்ஸ் லவ்வருக்கு சாப்பாடு ஆர்டர் பண்றத நிறுத்துமா - கெஞ்சிய சொமேட்டோ! | Girlfriend Revenge Her Ex Boyfriend Through Zomato

ஆனால், அவரின் முன்னாள் காதலர் அந்த உணவை, தான் ஆர்டர் செய்யவில்லை என்று கூறி வாங்குவதற்கு மறுத்துள்ளார். இதனை அறிந்த சோமேட்டோ நிறுவனம் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

வைரல் ட்வீட்

“போபாலைச் சேர்ந்த அங்கிதா அவர்களே, தயவு செய்து உங்கள் முன்னாள் காதலருக்கு கேஷ் ஆன் டெலிவரி செய்யும் உணவு ஆர்டரை நிறுத்தி கொள்ளுங்கள். இது போன்று நீங்கள் செய்வது இது 3வது முறையாகும். அந்த ஆர்டர்களுக்கு அவர் பணம் கொடுக்க மறுக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த ட்வீட் வைரலானதோடு மட்டுமல்லாம், நெட்டிசன்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியது. இதற்கு நானும் இந்த வேடிக்கையான செயலை இப்போது முயற்சி செய்யப் போகிறேன் போன்ற வேடிக்கையான கமெண்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.