பிளம்பிங் கருவியால் காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன் - மும்பையை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
சம்பவம் மும்பையைச் சேர்ந்தவர் சாகர் அருண் நாயக் (30). இவர் ஒரு இயந்திர பொறியாளர். இவர் 27 வயதான சயாலி ஷஹாசனே. இவர் கணினி பொறியாளர். இவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இவர்கள் இருவரும் வழக்கமாக செல்லும் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். இன்று இரவு திடீரென்று இவர்கள் அறையில் டிவி சத்தம் அதிகமாக கேட்டுள்ளனர். வழக்கமான வரும் விருந்தினர்கள் தானே என்று ஓட்டல் ஊழியர்கள் கண்டுக்கொள்ளவில்லை.
மறுநாள் காலை திங்கட்கிழமை அந்த அறையிலிருந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததால், ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக, ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அந்த அறையில் சயாலி ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். அவரை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பெண்ணின் தந்தை கூறுகையில்-
அவர்கள் இருவரும் வசையில் உள்ள கமானில் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீரென்று என்ன தவறு நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை” என்று கதறி அழுதவாறு கூறினார்.

ஓட்டல் ஊழியர்கள் கூறுகையில்-
இந்த ஜோடிகள் 7 ஆண்டுகளாக வழக்கமான விருந்தினர்கள். ஒரு முறை வருவார்கள் அல்லது ஒரே இரவில் தங்குவதற்கு ஒரு மாதத்திற்கு இரண்டு முறை வருவார்கள். அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களைத் தெரியும். கடந்த பிப்ரவரி 27ம் தேதி இந்த ஜோடி ஒரே அறையில் இருந்தனர். மாலை 5.30 மணிக்கு, அவர் எங்களிடம் வந்து பில் கேட்டார். மாலை 6 மணிக்கு அவர் கவுண்டரில் இறங்கி, ஒரு ஆப் மூலம் பணம் செலுத்தி விட்டுச் சென்றுவிட்டார். மறுநாள் காலை, ரூமிலிருந்து எந்த அசைவும் இல்லை. அதனால்தான் எங்களுக்கு சந்தேகம் வந்தது என்று தெரிவித்தனர்.
காதலியை முதலில் கயிற்றால் கழுத்தை நெரித்து பின்னர் தலையணையால் நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், காதலி உயிர் பிழைக்கப் போராடத் தொடங்கியபோது, காதலன் தனது பையிலிருந்து ஒரு பிளம்பிங் கருவியை எடுத்து, இடது காதுக்கு மேல் அவரது தலையில் அடித்ததால் அதிக ரத்த இழப்பு ஏற்பட்டு அப்பெண் இறந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலியை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் சாகர் அருண் நாயக்கை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.