சிக்கிய சூட்கேஸ்; காதலியுடன் நேரம் செலவிட மாணவர் செய்த செயல் - எப்புட்றா..
காதலியை சூட்கேசில் மறைத்துவைத்து மாணவன் விடுதிக்க எடுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாணவர் செய்த செயல்
ஹரியானா, சோனிபத் மாவட்டத்தில் பிரபல தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் விடுதிக்குள் பெரிய சூட்கேஸ் ஒன்றை எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது அந்த சூட்கேஸில் இருந்து பெண்ணின் குரல் கேட்டுள்ளது. இதனால் விடுதி காவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே, மாணவரை நிறுத்தி சூட்கேஸை சோதனை செய்துள்ளனர்.
சிக்கிய சூட்கேஸ்
சூட்கேஸில் இருந்து இளம்பெண் ஒருவர் வெளியே வந்துள்ளார். தொடர் விசாரணையில் அந்த பெண் சம்பந்தப்பட்ட மாணவரின் காதலி என்பதும், காதலியுடன் நேரம் செலவிடுவதற்காக அவரை சூட்கேசில் மறைத்து வைத்து தனது விடுதி அறைக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இச்சம்பவத்தை அங்குள்ள பிற மாணவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள கல்லூரி நிர்வாகத்தினர், தங்கள் கல்லூரியில் கடுமையான காவல் மற்றும் சோதனைகள் உள்ளது.
மாணவர்கள் சில நேரம் விளையாட்டுத் தனமாக ஏதாவது செய்துவிடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக யாரும் புகார் தரவில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.