எவ்வளவு முயன்றும் பேச மறுத்த காதலன் - நடுரோட்டில் புரட்டி எடுத்த பெண்கள்!

Chennai Relationship
By Sumathi Aug 09, 2025 08:27 AM GMT
Report

காதல் விவகாரத்தில் இளைஞரை, பெண்கள் தாக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

காதல் விவகாரம்

சென்னை, நெசப்​பாக்​கத்​தில் வசித்து வரும் 22 வயது இளம்​பெண் ஒரு​வர் சட்​டக் கல்​லூரி​யில் முதலா​மாண்டு படித்து வரு​கிறார்.

எவ்வளவு முயன்றும் பேச மறுத்த காதலன் - நடுரோட்டில் புரட்டி எடுத்த பெண்கள்! | Girlfriend Attacks Boyfriend Refused To Talk Video

இவரும் அசோக் நகரில் வசித்து வரும் தச்​சுத் தொழிலா​ளி​யான 21 வயது இளைஞரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 வாரங்​களுக்கு முன் இரு​வருக்​கும் இடையே சிறிய தகராறு ஏற்​பட்டுள்ளது. இதனால் இரு​வரும் பேசுவதை நிறுத்​திக் கொண்​டனர்.

தொடர்ந்து அந்தப் பெண் போனில் அழைத்​தும் அவரது காதலன் பேச மறுத்​துள்​ளார். இந்நிலையில் இளைஞர் தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்​தார்.

தாய் சொன்ன ஒற்றை வார்த்தை - 10 ஆண்டுகளாக ஆட்டோ டிரைவர் செய்த சம்பவம்!

தாய் சொன்ன ஒற்றை வார்த்தை - 10 ஆண்டுகளாக ஆட்டோ டிரைவர் செய்த சம்பவம்!

இளைஞர் மீது தாக்குதல்

இதையறிந்த காதலி தனது 19 வயது தங்​கை​யுடன் அங்கு சென்​று, பேசாதது குறித்து கேட்​டுள்​ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

எவ்வளவு முயன்றும் பேச மறுத்த காதலன் - நடுரோட்டில் புரட்டி எடுத்த பெண்கள்! | Girlfriend Attacks Boyfriend Refused To Talk Video

அதனால் ஆத்திரமடைந்த காதலி அருகே கிடந்த மரக்​கட்​டையை எடுத்து காதலனை சரமாரி​யாகத் தாக்​கி​யுள்​ளார். இதில், நிலை குலைந்த காதலன் அங்​கேயே சரிந்து விழுந்​துள்​ளார். உடனே இளைஞரை அவரது தாய் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி வருகிறது.