57 வயது பெண்ணுடன் 27 வயது இளைஞனுக்கு ஏற்பட்ட காதல்- இறுதியில் விபரீதத்தில் முடிந்த சோகம்
57 வயது பெண்மணியுடன் தொடர்பு வைத்திருந்த வாலிபருக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 57). இவர் கணவனை இறந்து விடவே தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் சொந்தமாக உணவு கடையை நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் தேவேந்திரன் என்ற 27 வயது இளைஞர் பணியாற்றி வந்தான். நாளடைவில் இவர்கள் இருவருக்கும் காதலிக்க ஆரம்பித்தனர். இவர்கள் இஇருவரும் தாலி கட்டாமல் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு இவர்கள் இருவரும் தனியாக இருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் தரக்குறைவாக பேசியுள்ளனர். வயதை காரணம் காட்டி இருவரையும் திட்டிதீர்த்துள்ளனர்.

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தனர். இதில், சம்பவ இடத்திலேயே பச்சையம்மாள் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் உடனடியாக அங்கு விரைந்த போலீசார் தேவேந்திரனை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பச்சையம்மாளை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேவேந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.