ஒரு மகனுக்கு தாய் மற்றொரு மகனுக்கு தந்தை - இரு இனப்பெருக்க அமைப்பால் நடந்த வினோதம்
ஒரு குழந்தைக்கு தாயாகவும், இன்னொரு குழந்தைக்கு தந்தையாகவும் ஒரு நபர் வாழ்ந்து வருகிறார்.
இரு இனப்பெருக்க அமைப்பு
சீனாவின் சோங்கிங் நகராட்சி பிஷன் கவுண்டியில் வாழ்ந்து வருபவர் லியு(59). லியுவிற்கு ஆண் மற்றும் பெண்ணிற்கான இரு இனப்பெருக்க அமைப்பு இருந்தாலும், அரசு ஆவணங்களின் படி பெண்ணாக அறியப்படுகிறார்.
இவர் தனது 18 வயதில், டாங் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்திற்கு பின் லியுவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
முதல் குழந்தைக்கு தாய்
இதனையடுத்து, லியுவின் மார்பகங்கள் சிறிதாவது, முகத்தில் தாடி முளைப்பது, ஆண் இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சியடைவது என அவரின் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லியுவின் கணவர், டாங் அவரை விவாகரத்து செய்தார்.
அதன் பிறகு ஒரு காலணி தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து, ஆணாக வாழ தொடங்கிய லியு மீது சக ஊழியரான ஜோ என்ற பெண்ணிற்கு காதல் மலர்ந்துள்ளது. ஆரம்பத்தில் தனது உடல்நிலை காரணமாக தயங்கிய லியு, பின்னர் ஜோவின் காதலுக்கு சம்மதித்தார்.
2வது குழந்தைக்கு தந்தை
சீனாவில் ஓரின சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதியில்லை. அரசு ஆவணங்களின் படி லியு பெண்ணாக உள்ளதால் இவர்கள் திருமணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் தனது முன்னாள் கணவரான டாங்கின் உதவியை நாடினார் லியு.
இதனையடுத்து, டாங் மற்றும் ஜோ திருமணம் செய்து கொண்டனர். அதே வேளையில், லியுவும் இவர்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். லியு மூலம் ஜோவிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தற்போது லியு ஒரு மகனுக்கு தாயாகவும், இன்னொரு மகனுக்கு தந்தையாகவும் வாழ்ந்து வருகிறார். லியுவின் இந்த வினோத வாழ்க்கை உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.