கிணற்றில் விழுந்த சிறுமி.., போன் சிக்னல் வைத்து மீட்பு

trichy
By Yashini May 13, 2026 01:51 PM GMT
Report

ஆட்டுக்குட்டியை மீட்க முயன்று கிணற்றில் விழுந்த சிறுமியை, மொபைல் போன் சிக்னலை வைத்து பொலிஸார் மீட்டனர்.

போன் சிக்னல் வைத்து மீட்பு 

திருச்சி மாவட்டம், காருகுடியை சேர்ந்த சண்முகம் மகள் தனுஷ்யா பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், தங்கள் வீட்டில் உள்ள ஆடுகளை வயல்வெளிகளில் மேய்ச்சலுக்காக நேற்று முன்தினம் ஓட்டிச்சென்றார்.

அதன்பின் வீடு திரும்பாத காரணத்தினால் அவரது பெற்றோர் பொலிஸாரிடம் புகார் அளித்ததன் பெயரில் விசாரணை நடந்தது.

கிணற்றில் விழுந்த சிறுமி.., போன் சிக்னல் வைத்து மீட்பு | Girl Who Fell Into Well Rescued By Phone Signal

சிறுமியின் மொபைல் போன், கடைசியாக பயன்படுத்திய இடம், ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற பகுதியை காட்டியது.

கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்க முயன்று அச்சிறுமியும் கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

பின்னர் பொலிஸார் அங்கு சென்று தேடியதில், கிணற்றுக்குள், ஒரு திட்டை பிடித்து கொண்டிருந்த அச்சிறுமியை கண்டனர்.

இதனைதொடர்நது தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சிறுமியுடன் ஆட்டுக்குட்டி ஒன்றையும் மீட்டனர்.