தேயிலை தோட்டத்தில் கால்களை கட்டி 2 நாட்களாக சிறுமி பலாத்காரம் : வெளியான பகீர் சம்பவம்
14 வயது சிறுமியினை கை, கால்களை கட்டி தேயிலைத் தோட்டத்தில் வைத்து இரண்டு நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாமில் கொடூர சம்பவம்
அசாம் மாநிலத்தில் திப்ரூகார் மாவட்டத்தில் உள்ள பெபேஜியா கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 3ஆம் தேதி அன்று திடீரென்று காணாமல் போய் இருக்கிறார்.
பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு எங்கேயும் இல்லாததால் தாயார் போலீசில் புகார் அளித்திருக்கிறார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
சிறுமி கூட்டு பலாத்காரம்
இந்த நிலையில் அத்தபாரி தேயிலைத் தோட்டத்திற்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி ஒருவர் சுயநினைவின்றி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்திருக்கிறது. உடனே அப்பகுதிக்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பின்னர் சிறுமியிடம் நடத்திய விசாரணையை அடுத்து சிறுமியின் தாயாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் நேரில் வந்து மகளை பார்த்து கதறி அழுத்திருக்கிறார்.
பின்னர் மகளிடம் சிறுமி தாயார் பேசிய பின்னர் பைஜான் அலி என்பவர் மீது சந்தேகத்தின் பேரில் கடத்தல் புகார் அளித்திருக்கிறார் சிறுமியின் தாயார் . பைஜான் அலியை பிடித்து போலீசார விசாரித்த போது தான் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
காவல்துறை விசாரணை
தைஜான் அலி , கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த சிறுமியை கை, கால்களை கட்டி போட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. கூட்டாளிகள் ரெண்டு பேரும் பைஜானுக்கு மதுவை வாங்கி கொடுத்திருக்கிறார்கள் .
இதை அடுத்து சிறுமியை பை ஜான் கடத்தி சென்று தேயிலைத் தோட்டத்தில் வைத்து கை கால்களை கட்டி போட்டு இரண்டு நாட்களாக பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியானது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் , இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.