வாழைப்பழம் கொடுத்து சிறுமி பலாத்காரம் : காவல்துறையில் சிக்கிய வட மாநில இளைஞர்
வாழைப்பழமும் சிப்சும் கொடுத்து ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு பாலியல் கொடுமை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொட்டபயலோக கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த மணிஷ் என்பவர் பெயிண்டராக வேலை செய்து வருகின்றார்.
அப்போது இவர் தங்கியிருந்த வீட்டின் அருகே தம்பதியினர் வசித்து வந்துள்ளனர், அந்த தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கூலி வேலையினை செய்யும் இந்த தம்பதியினர் மகளை வீடில் தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுள்ளனர்.
வாழைப்பழம் கொடுத்து வன்கொடுமை
இதனை வெகு நாட்களாக கவனித்து வந்த மணிஷ் சிறுமியின் பெற்றோர்கள் வேலைக்கு சென்றதும் சிறுமிக்கு வாழைப்பழம் சிப்ஸ் கொடுத்து பேசியாவாறு அந்த குழந்தையினை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதனால் சிறுமி அழுதவாறே இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர்கள் அந்த சிறுமியிடம் விசாரித்த போது நடந்த சம்பவத்தை கூறவே அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மனிஸினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.