ஒரே நேரத்தில் 2 இளைஞரை.. பெண்ணுக்கு கடைசியில் நேர்ந்த விபரீதம் - அதிரவைத்த சம்பவம்!
மாணவி ஒருவர் 2 இளைஞரை காதலித்து ஏமாற்றியதால் நடந்த விபரீதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவருடன் காதல்
ஆந்திரா, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் 12-ம் வகுப்பு மாணவி. தன்னுடன் நண்பர்களாக பழகி வந்த சாய்குமார் (23) சூரிய பிரகாஷ் (25) ஆகிய இருவரையும் ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவரை காதலித்து வந்துள்ளார்.
தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன் சாய்குமாரை மாணவி ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பின்னும் சூரிய பிரகாஷுடன் தன்னுடைய காதலை தொடர்ந்து வந்துள்ளார்.
தற்கொலை
இந்நிலையில் திருமணம் நடைபெற்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின. இதனால் அதிர்ச்சியடைந்த சூர்ய பிரகாஷ் மாணவியிடம் கேட்க, அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், இளைஞர்கள் இருவரும் மாணவியின் வீட்டுக்குச் சென்று தெளிவான முடிவை கூறுமாறு வலியுறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதனையடுத்து, போலீஸார் கைது செய்து விடுவார்களோ என பயந்த சூரிய பிரகாஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து, மாணவிக்கு தாலி கட்டிய சாய்குமாரை கைது செய்துள்ளனர்.