2 முறை கர்ப்பம்.. கைவிட்ட காதலன் - இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!
கர்ப்பம் ஆக்கிவிட்டு காதலன் ஏமாற்றியதில், இளம்பெண் தற்கொலை செய்துள்ளார்.
காதல் விவகாரம்
தூத்துக்குடி லேபர் காலனியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகள் ஹரிணி. (20), தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரது, வீட்டு அருகே உள்ள இளைஞர் ராகுல் காந்தி என்ற ராபி.
தனது அக்கா வீட்டில் தங்கி கூலி வெலை செய்து வருகிறார். இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த பழக்கத்தில் ஹரிணி 2 முறை கர்ப்பமாகி உள்ளார்.
தற்கொலை
அதனை மாத்திரை பயன்படுத்தி கலைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த உறவு ராபியின் அக்கவிற்கு தெரியவர, இருவரும் வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால், ஹரிணியின் வீட்டில் சென்று சண்டையிட்டுள்ளார். இதனால் அந்த இளைஞர் காதலியுடனான உறவை துண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த பெண் லைக்கு சாயம் அடிக்க பயன்படும் சூப்பர் வாஸ்மால் எனும் திரவத்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். தொடர்ந்து புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் அவர் தற்போதும் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
அதனையடுத்து, அந்த இளைஞரை உடனடியாக கைது செய்ய பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.