கள்ளகாதலால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு - அதிர்ச்சியில் உறைய வைத்த காட்சி!
கள்ளக்காதல் விவகாரத்தில் மனம் உடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்காதல்
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா - அவனிகா தம்பதியினர். கூலித் தொழிலாளியான கருப்பையா மனைவி அவனிகாவின் உறவினரான ராம்குமார் என்பவருடன் அண்டை மாநிலமான கேரளாவுக்குத் தினமும் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.இதன்காரணமாக ராம்குமார் அடிக்கடி கருப்பையா வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
இதனால் ராம்குமாருக்கும், அவனிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் அடிக்கடி இருவரும் தனிமையிலிருந்துள்ளனர். இந்த விவகாரம் கருப்பையாவுக்கு தெரியவரவே, அவர்கள் 2 பேரையும் கண்டித்து எச்சரித்துள்ளார்.
ஆனால் இதனைப் பொருட்படுத்தாமல் இருவரும் தங்களது கள்ளக்காதலைத் தொடர்ந்துள்ளனர்.இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அவனிகா வீட்டுக்கு ராம்குமார் சென்றுள்ளார். அப்போது 2 பேரும் தனிமையில் இருந்ததைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டின் கதவு தாழ்ப்பாளை வெளிப்புறமாகப் பூட்டி ,
விபரீத முடிவு
இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தார்.இதனையடுத்து பொதுமக்கள் வீட்டின் முன்பு குவிந்தனர். இதனை அறிந்த 2 பேரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ராம்குமார் உடனான கள்ளக்காதல் ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டதே என்ற மனம் உடைந்த அவனிகா சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அவனிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.