காதலனுக்கு தொடர் டார்ச்சர் செய்து வீடியோ எடுத்த காதலி - பகீர் சம்பவம்

Attempted Murder Kerala Relationship Crime
By Sumathi Apr 12, 2023 09:35 AM GMT
Report

பெண் ஒருவர் காதலனை காதலனுக்கு தொடர் டார்ச்சர் செய்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2வது காதல்

கேரளா, திருவனந்தபுரம் அருகே வர்க்கலா செர்னியூரை சேர்ந்தவர் லட்சுமி பிரியா (19). கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் இவரும் அதேப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் லட்சுமி பிரியாவுக்கு கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது.

காதலனுக்கு தொடர் டார்ச்சர் செய்து வீடியோ எடுத்த காதலி - பகீர் சம்பவம் | Girl Stripping And Attacking A Youth Kerala

இதனால் முதல் காதலனிடமிருந்து பிரிந்து வந்துள்ளார். இதனால் அவர் அடிக்கடி லட்சுமியை சந்திக்க முயன்றுள்ளார். ஆத்திரமடைந்த காதலி சில தினங்களுக்கு முன்பு காதலனை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் பார்க்க சென்றபோது 2வது காதலனும் இருந்துள்ளார்.

காதலி கொடூர தாக்குதல்

இருவரும், கூட்டாளிகள் துணையுடன் முதல் காதலனை காரில் கடத்தி அடித்து சித்ரவதை செய்து, பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர். இதற்கிடையில் மகனை காணவில்லை என பெற்றோர் புகாரளித்ததில், தேடிய போது அவர் உடல் முழுவதும் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. உடனே போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதனையடுத்த விசாரணையில் காதலியின் தாயார், “ தனது மகள் லட்சுமி பிரியாவும், தாக்குதலுக்கு உள்ளான மாணவரும் ஒரே வயதுடையைவர்கள் என்றும், இருவரும் நட்பாகவே பழகியதாகவும், அவர்களுக்குள் காதல் எதுவும் இல்லை எனவும் கூறினார். ஆனால், அந்த மாணவர், தனது மகளை காதலிக்க கூறி வற்புறுத்தியதாகவும், செல்போனில் தவறாகப் பேசியதுடன் மோசமான வீடியோக்களை அனுப்பி தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட காதலன், தன்னை மயக்கம் வரும் வரை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாகவும், அதை லட்சுமி பிரியா செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, காதலியையும் அவரது 2வது காதலனையும் கைது செய்துள்ளனர்.