படுக்கையில் பாம்புகளுடன் பின்னிப்பிணைந்து தூங்கும் சிறுமி - பார்ப்பவர்களை பதறவைக்கும் வீடியோ!

Viral Video Snake
By Vinothini Sep 04, 2023 11:15 AM GMT
Report

சிறுமி ஒருவர் பாம்புகளுடன் கட்டியணைத்து தூங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

விஷப்பாம்புகள்

பாம்பு என்றாலே அனைவருக்கும் பயம் இருக்கும், அதிலும் விஷப்பாம்புகளை கண்டாலே நடுங்கும். ஆனால் தற்பொழுது இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அரியானா என்ற சிறுமி ஒருவர் விஷப்பாம்புகளுடன் கட்டிப்பிடித்துகொண்டு படுக்கையில் படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறார்.

படுக்கையில் பாம்புகளுடன் பின்னிப்பிணைந்து தூங்கும் சிறுமி - பார்ப்பவர்களை பதறவைக்கும் வீடியோ! | Girl Sleeping With Snakes Video Goes Viral

இந்த வீடியோவை கண்ட பலர் பயந்துபோய் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் அந்த சிறுமி எந்த பயமும் இன்றி உறங்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. மேலும், அதில் அவரது உடலை பாம்புகள் சுற்றி நெளிந்துகொண்டிருக்கிறது அத்திண்ணை கண்டாலே நமக்கு பீதி கிளம்புகிறது.

வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். இணையத்தில் வைரலான இந்த வீடியோவை 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். 62 ஆயிரம் பேர் இதை பகிர்ந்துள்ளார்கள். பலர் இதுகுறித்து ஆச்சரியப்பட்டு கருத்து தெரிவித்து உள்ளனர்.